வவுனியா அட்டமஸ்கட சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான தேரர் பிணையில் விடுதலை!!

வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 6ஆம் திகதி சிறுவர் இல்லத்தில் வாழ்ந்த சிறுவன் ஒருவன் தாக்கல் செய்த முறைப்பாட்டின் படி கைது செய்யப்பட்ட அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தின் காப்பாளரும் விகாராதிபதியுமான கல்யாணதிஸ்ஸ தேரா விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று வவனியா நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரின் அறிக்ககையின் பிரகாரம் சட்டமா அதிபர் பிணை வழங்குவதற்கு ஆட்சேபம் இல்லை என தெரிவித்ததை அடுத்தே நீதிபதி இராமக்கமலன் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் சந்தேகநபரான கல்யாணதிஸ்ஸ தேராவை விடுதலை செய்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :