ஹெரோயின் கடத்தி வந்த பாகிஸ்தானியருக்கு சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றம்

வுதி அரேபியா நாட்டில் கற்பழிப்பு, கொலை, ஆயுதமேந்திய கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் போன்றவை கடும் குற்றங்களாக கருதப்படுகிறது. இதுபோன்று குற்ற செயல்களில் ஈடுபடுவோரின் தலையை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இவ்வகையில், கடந்த ஆண்டு மட்டும் 76 குற்றவாளிகள் தலை துண்டித்து மரண தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஏராளமான ஹெராயின் எனப்படும் போதைப்பொருளை சவுதி அரேபியாவுக்கு கடத்தி வந்த பாகிஸ்தானியர் ஜாபர் குலாம் அலி கான் என்பவனுக்கு நேற்று தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி அரசு அறிவித்துள்ளது.

இவனுடன் சேர்த்து இந்த ஆண்டில் இதுவரை 71 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :