இக்பால் அலி
பறகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா மற்றும் காத்தான்குடி பாலமுனை அல் அம்மார் ஜும்ஆப் பள்ளிவாசல் ஆகிய இணைந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மர்கஸுல் இஸ்லாமி நிலையத்தின் திறப்பு விழா 15-11-2013 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையுடன் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் அஷ;nஷய்க் என். பீ. எம் ஜுனைத் மதனி குத்பாப்பேருரையை நிகழ்த்தவுள்ளார். பறகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ;nஷய்க் என். பீ. முஹம்மது சித்தீக் மதனி சிறப்புரையினையும் நிகழ்த்தவுள்ளனர்.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்த அஷ;nஷய்க் அப்துல் அஸீஸ், ஹுமைன் அல் ஹுமைன், சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்த திஹாம் அப்துர் ரஹ்மான் அத் திஹாம் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்
அத்துடன் பஹகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா பொதுச் செயலாளர் ஏ. எல் கலிலுர்ரஹ்மான் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்
இந்த நிலையத்தில் ஜும்ஆ பள்ளிவாசல், மூன்று கடைத் தொகுதி, குர்ஆன் மத்ரஸா ஆகிய கட்டிட வசதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளன.
0 comments :
Post a Comment