
- எஸ்.அஷ்ரப்கான் -
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபர் கபூர் பிரதிக் கல்விப்பணிப்பாளர் முக்தாரினால் தாக்கப்பட்ட சம்பவத்தினால்பாடசாலையில் ஏற்பட்ட அசாதாரண நிலையினை பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்களுக்கு விளக்கமளிக்கும்கூட்டம் நேற்று முன்தினம் (03) பாடசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை பதில் அதிபர் எம்.எஸ்.எம்.ஹம்சா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் தாக்குதல் சம்பவம்குறித்து ஏழு அம்சக்கோரிக்கைகளை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், கல்விமான்கள், சாய்ந்தமருது, கல்முனைக்குடிபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், உலமாக்கள், பெற்றோர்கள், பாடசாலையில் கல்விகற்ற திணைக்களதலைவர்கள், விளையாட்டுக் கழக பிரதிநிதிகள் உலமாக்கள் ஆகியோரால் ஏகமனதாக தக்பீர் முழக்கத்துடன்நிறைவேற்றப்பட்டது.
அக்கோரிக்கைகளாவன, எமது பாடசாலையின் நிர்வாகம்,கல்வி மற்றும் ஏனைய விடயங்களில் முறையற்ற விதமாகவும்,அதிகார துஷ்பிரயோகம் செய்தும் பாடசாலையின் அபிவிருத்திக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் பிரதிக் கல்விப்பணிப்பாளர்(திட்டமிடல்) ஏ.எல்.எம்.முக்தார் அவர்கள் இப்பாடசாலையின் மேற்படி செயற்பாடுகளிலிருந்து பாடசாலைக்குள்ளோ அல்லதுவெளியிலோ தலையிடுவதனை முற்றாக நிறுத்துவதுடன் கல்முனை கல்வி வலயத்திலிருந்து இடமாற்றப்பட வேண்டும்.
எமது பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.ஏ.கபூர் அவர்களுக்கு செருப்பால் அடித்து அவமானப்படுத்திய ஏ.எல்.எம்.ஹம்சா ஆசிரியர்எமது பாடசாலையிலிருந்து உடனடியாக இடமாற்றப்பட வேண்டும்.
தரம் 06ல் கல்வி கற்பிக்கும் பெண் ஆசிரியைகளுக்கு தூஷன வார்த்தைகள் மற்றும் பட்டப் பெயர்களை மாணவர்களுக்குமத்தியில் உபயோகித்து, மாணவர்களை பட்டப் பெயர்கள் கொண்டு அழைக்கும்படி கூறி ஆசிரியர்களையும் மாணவர்களையும்இழிவுபடுத்திய ஏ.எல்.எம்.நஸீர் ஆசிரியர் எமது பாடசாலையிலிருந்து உடனடியாக இடமாற்றப்பட வேண்டும். (இவர் ஏற்கனவேபாடசாலைக்கு பொருத்தமற்றவர் என இடமாற்றம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்களை தொடர்ந்து அச்சுறுத்தல்கள் மற்றும் பயமுறுத்தல்கள் வழங்கி அவர்களதுகல்வி மற்றும் நிர்வாக செயற்பாடுகளை முடக்கும் பிரதிக் கல்விப்பணிப்பாளர் (திட்டமிடல்) ஏ.எல்.எம்.முக்தார் அவர்களுக்குஎதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட வேண்டும். அத்துடன் எந்த அதிபர்களோ, ஆசிரியர்களோ,கல்விசாரஉத்தியோகத்தர்களோ, மாணவர்களோ அலுவல ரீதியாகவோ மற்றும் தனிப்பட்ட ரீதியாகவோ இவரினால் பழிவாங்கப்படக்கூடாது எனவும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களுக்கு பொய்யான முறைப்பாடுகளை பொலிஸில் பதிவு செய்து அதிபர்களையும்ஆசிரியர்களையும் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிப்படையச் செய்யும் பிரதிக் கல்விப்பணிப்பாளர் (திட்டமிடல்)ஏ.எல்.எம்.முக்தார் அவர்களின் பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக பொலிஸாருக்கு விளக்கமளித்து இவரதுஇச்செயற்பாடுகளை முற்றாக நிறுத்த வேண்டும்.
ஊடகங்களிலும்,சமூகத்திலும்,தனிப்பட்டவர்களுக்கும்,அலுவலகங்களிலும் மற்றும் ஏனைய அமைப்புக்களுக்கும் எமதுபாடசாலையை பற்றி தரக்குறைவாகவும்,பொய்க் குற்றச்சாட்டுக்களையும் மற்றும் வீண்பழிகளை சுமத்தி வரும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் (திட்டமிடல்) ஏ.எல்.எம்.முக்தார் அவர்களுக்கு எதிராக நீதி மன்றம் ஒன்றில் ஆட்படுத்தி சட்ட நடவடிக்கைஎடுக்கப்படல் வேண்டும்.
மேற்படி கோரிக்கைகள் அனைத்தையும் இக்கலந்துரையாடலில் நிறைவேற்ற தீர்மானம் எடுக்கப்படுவதுடன் இக்கூட்டத்தில்உருவாக்கப்படும் பாடசாலை மகா சபை உடன் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். என்ற 7 அம்சக் கோரிக்கைகள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

0 comments :
Post a Comment