காட்டிக் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் தெரிவித்த போதும் அந்த நிலைக்கு தாம் வீழப்போவதில்லை

கா
ட்டிக் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்ட போதும், தாம் அந்த நிலைமைக்கு வீழப்போவதில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் பதவிக்கு தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

புதிய பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர் நேற்று மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், தாம் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபித்து, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நன்மைகளை வழங்க தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

எனவே, எந்த குற்றச்சாட்டுகள் வந்தபோதும், தாம் வீழப்போவதில்லை என்றும் கருஜயசூரிய குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :