கல்முனை வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் முக்தார் கின்னியாக்கு உடனடி இடமாற்றம்

ல்முனை பிரதிக் கல்விப் பணிப்பாளர் முக்தார் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கிண்ணியா கல்வி வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இம்போட் மிரர் இணையத்துக்கு ஹரீஸ் எம்பியின் ஊடகப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்த கடிதமொன்று இன்று வியாழக்கிழமை கல்முனை கல்வி வலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




நேற்று புதன்கிழமை கல்முனை எம்.பி. ஹரீஸ் தலைமையில் முக்கிய கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. கல்முனை ஸாஹிரா கல்லூரி நிர்வாகம், ஹரீஸ் எம்.பி.யிடம் முன்மொழிந்த 7 கோரிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், இவற்றுக்கு உடனுக்குடன் தீர்வும் காணப்பட்டுள்ளது.


அந்தவகையில் இதுகாலவரையும் கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளராக இதுவரையும் இருந்துவந்த முக்தார் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜய விக்கிரமவுடன் ஹரீஸ் எம்.பி.யும், மாகாண சபை உறுப்பினர் ஜெமீலும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.


இதையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம், கல்முனை பிரதிக் கல்விப் பணிப்பாளராக செயற்பட்டுவந்த முக்தாருக்கு உடனடி இடமாற்றத்தை வழங்கியுள்ளது.


இதன்மூலம் கல்முனை ஸாஹிரா கல்லூரி மற்றும் அதன் மகா சபை இணைந்து ஹரீஸ் எம்.பி.யிடன் முன்மொழிந்த 7 கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு எட்டப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

இது சம்மந்தமாக பாடசாலை சமூகம் மற்றும் நலன் விரும்பிகளும் ஹரீஸ் எம்பிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :