-எம்.பைஷல் இஸ்மாயில் , ஏ.ஜி.ஏ.கபூர் -
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற கட்டிடத் தொகுதி திறப்பு விழா இன்று (05) அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எஸ்.எல்.ஏ.றசிட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், விஷேட அதிதியாக கலந்து கொண்ட நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றஊப் ஹக்கீம் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
பிரதம அதிதி மற்றும் விஷேட அதிதிகளினால் புதிய நீதிமன்ற கட்டிடம் திறை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
பிரதம நீதியரசருக்கு அக்கரைப்பற்று பொலிஸாரினால் அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, நீதவான் நீதிமன்ற நீதிபதி ரீ.சரவணராஜா, நீதியமைச்சின் பிரதிச் செயலாளர் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட சட்டத்தரணிகள் ஆகியோர்கள் பங்கு கொண்டனர்.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், ஆரிப் சம்சுதீன் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், நிந்தவூர் தவிசாளர் ஏ.எல்.அஷ்ரப், அக்கரைப்பற்று தவிசாளர் றாசீக் உட்பட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


0 comments :
Post a Comment