எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரம் பேர் சிகிச்சை பெறாமல் இருக்கின்றனர்

நாடளாவிய ரீதியில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான சுமார் 2 ஆயிரம் பேர் சிகிச்சைகளுக்கு தம்மை உட்படுத்தி கொள்ளாமல் இருந்து வருவதாக இலங்கை எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 உலக சுகாதார அமைப்பு, யூனிசெப் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து மேற்கொண்ட மதிப்பீட்டில் இந்த தகவல் தெரியவந்துள்ளது என எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே தெரிவித்தார். 

இந்த மதிப்பீட்டின் பிரகாரம் இலங்கையில் எயிட்ஸ் வைரஸ் தொற்றுக்கு இலக்கான மூவாயிரம் பேர் இருப்பதாகவும் இவர்களில் ஆயிரம் பேர் மாத்திரமே சிகிச்சைக்கு தம்மை உட்படுத்தி கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 
 
தம்மை சிகிச்சைக்காக உட்படுத்திக் கொள்ளாத எயிட்ஸ் நோயாளிகளின் பாதுகாப்பற்ற பாலுறவு காரணமாக மேலும் பலர் அந்த நோயினால் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்கான 69 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 12 பேர் குழந்தைகள். தாயிடம் இருந்து இவர்களுக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ளது. 

மேலும் மூன்று குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்றுவதை தடுக்க தாய்க்கு தேவையான மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :