கனடாவிற்கு அனுப்பி வைப்பதாக பொய் கூறி பலரிடம் பண மோசடி

னடாவிற்கு அனுப்பி வைப்பதாக பொய் கூறி பலரிடம் பண மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் ஜா-எல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று (05) இரவு மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 94 கடவுச்சீட்டு, 24 உடல் நல ஆவணம், 146 புகைப்படங்கள், 5 வங்கிப் புத்தகங்கள் மற்றும் 4 கடனட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

இவர் பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கனடா செல்ல முயற்சித்து ஜா-எல பகுதியில் யாராவது பண மோசடிக்கு உள்ளாகியிருந்தால் உடனடியாக 0773917092 என்ற தொலைபேசிக்கு அழைத்து மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவு பரிசோதகர் உபுல் சமரசிங்கவிடம் முறையிடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :