சனல் 4 விவரணப்பட தயாரிப்பாளர் கலும் மக்ரெ இலங்கை செல்வதற்கான வீசாவுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையின் பொதுநலவாய மாநாட்டுக்கு வரும் முன்னர் இந்தியாவுக்கு எதிர்வரும் 14 ம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார்.
இதன்போது தாமும் புதுடில்லியில் இருக்கும் வகையில் கலும் மக்ரே இந்தியாவுக்கான வீசாவை கோரியிருந்த போதும் இந்திய அதிகாரிகள் அதற்கு அனுமதியளிக்கவில்லை.
இந்தநிலையில் கலும் மக்ரேக்கு பிரித்தானியாவில் உள்ள 30 செய்தி நிறுவனங்களுடன் வீசா அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையின் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி நிறுவனங்கள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுடன் இந்தியாவுக்கு சென்று அங்கிருந்தே இலங்கை மாநாட்டுக்கு வருகின்றன. எனினும் தற்போது இந்திய வீசா மக்ரேக்கு மறுக்கப்பட்டுள்ளமையால் அவர் இலங்கைக்கு நேரடியாக வருவதற்கான வீசா அனுமதியை கோரவேண்டும் என்று கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

எனினும் மக்ரே கொழும்பில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வெளியிட்ட தகவலில் தமக்கு வீசா வழங்கியமையை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment