எனக்கு தெரியாமலேயே முதலிரவு நடந்துவிட்டது. தனுஷ் மீது நஸ்ரியா அதிர்ச்சி புகார்.

னுஷ் ஜோடியாக நய்யாண்டி படத்தில் நஸ்ரியா நடித்துள்ளார். இந்த படத்தில் முதலிரவு காட்சியில் கிளு கிளுப்பான பாடலுக்கு தனுஷுடன் நடிக்க மறுத்துவிட்டார் நஸ்ரியா.

 இதுபோன்ற பாடல் காட்சி படத்தில் இடம்பெறுவதை சற்குணம் மறைத்துவிட்டாராம். ஷூட்டிங்கின்போதுதான் அதை நஸ்ரியாவிடம் சொல்லியிருக்கிறார். உடனே நடிக்க மறுத்து ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியேறினார் நஸ்ரியா. கிளுகிளுப்பு எதுவும் இல்லாமல் முதலிரவு காட்சி எடுத்தால் நடிக்க தயார் என்று இயக்குனரிடம் கூறினார். இயக்குனர் அதற்கு உடன்பட்டாலும் தனுஷ் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. முதலிரவு காட்சியில் கிளுகிளுப்பு இல்லாவிட்டால் எப்படி? என கோபப்பட்டாரம்.

இதையடுத்து தனுஷின் யோசனைப்படி நஸ்ரியாவுக்கு பதில் டூப் நடிகையை வைத்து கிளு கிளுப்பான காட்சியை சற்குணம் படமாக்கிவிட்டார். தற்போது அந்த காட்சிகளை பார்த்து நஸ்ரியா அதிர்ச்சியடைந்துள்ளார். தன்னிடம் அனுமதி பெறாமலேயே டூப் நடிகையை வைத்து மிகவும் அருவருக்கத்தக்க முறையில் முதலிரவு காட்சியை எடுத்துள்ளார்கள். தனுஷையும், இயக்குனரையும் சும்மா விடமாட்டேன் என கோபமாக கூறியுள்ளாராம்.

இப்போது படம் அக்டோபர் 11ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில் நடிகர் சங்கத்தில் தனுஷ் மற்றும் சற்குணம் மீது நஸ்ரியா கொடுத்த புகாரில், குறிப்பிட்ட பாடல் காட்சியில் நான் நடிக்கவில்லை. ஆனால் நான் நடித்திருப்பதுபோல் காட்டுகிறார்கள். என் அனுமதி பெறாமல் இந்த காட்சியை படமாக்கியது தவறு. இதை படத்திலிருந்து நீக்க வேண்டும் என கூறியுள்ளார். சங்கம் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் சற்குணம் மீது வழக்கு தொடரவும் நஸ்ரியா முடிவு செய்துள்ளாராம்.�

இயக்குனர் சற்குணம் தரப்பில் இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, முதலில் முதலிரவு காட்சியில் நடிக்கமுடியாது என நஸ்ரியா கூறியது உண்மைதான். பின்னர் அதிக தொகை தருவதாக கூறியதும் அவர் அந்தக்காட்சியில் நடிக்க ஒப்புகொண்டு நடித்தார். ஆனால் இப்பொழுது ஏன் இவ்வாறு கூறுகிறார் என தெரியவில்லை என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :