விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்- முழு படங்கள்

ட மாகாணத்தின் முதலமைச்சராக சிவி விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

25 வருடங்களின் பின் வடமாகாணத்தில் கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி அமோக வெற்றியீட்டி 36 அசனங்களில் 30 ஆசனங்களை கைப்பற்றியிருந்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட சி.வி. விக்னேஸ்வரன் 132,255 விருப்பு வாக்குகளை பெற்றார்.

வடக்கு கிழக்கு தேர்தல் வரலாற்றில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற பெருமையும் தமிழரசுக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரனையே சாரும்.

இதன் பின்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவு செய்யபட்ட 28 உறுப்பினர்களும் சி.வி.விக்னேஸ்வரனை வட மாகாண முதலமைச்சராக கடந்த செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி ஏகமனதாக தெரிவு செய்தனர்.

இந்நிலையில் வடமாகாண முதலமைச்சர் சத்தியப் பிரமாணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த வடமாகாண மக்களை கருத்திற் கொண்டு முதலமைச்சர் ஜனாதிபதி முன் சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என கூட்டமைபபின் பங்காளி கட்சிகள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பகிரங்கமாக வலியுறுத்தினர்.

எனினும் முதலமைச்சர் ஜனாதிபதி முன் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதானது நல்லிணக்கத்துக்கான வழி என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :