மிகவும் பரபரப்பான ஒரு சூழலில் ஐ.தே. கட்சியின் செயற்குழுத் தலைவர் ரணில் விக்ரம சிங்க தலைமையில் இன்று (07) மாலை சிரிகொத்தாவில் கூடுகிறது. இன்றைய கூட்டம் மிக முக்கியமான காலகட்டத்தில் நடைபெறுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்யாவிட்டால் ஐ.தே.க.வில் உயர் பதவி வகிப்போரும் செயற்குழு உறுப்பினர்கள் சிலரும் இன்று இராஜினாமா செய்வரென சிரிகொத்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சியின் உயர் மட்டத்தில் மாற்றங்களைக் கோரிப் பேசிய லக்ஷ்மன் கிரியல்ல விரக்தியுற்று நாட்டை விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்கவைப் பாதுகாத்தால் மட்டுமே கட்சியைப் பாதுகாக்கலாமென ஐ.தே.க. தேசிய அமைப்பாளர் தயாகமகே தெரிவித்தார். ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் விலகத் தேவையில்லை என்றும் அவர் மேலும் தெவித்தார்.
கட்சி யாப்பின் பிரகாரம், தலைவருக்கு ஏகமனதாக தீர்ப்பு எடுக்க முடியாது. ஜனநாயகக் கட்சி என்ற வகையில் செயற்குழு பகிரங்கமாக பேசி தீர்மானம் எடுக்கலாமென அவர் கூறினார். ரணில் தலைமைத்துவத்திலிருந்து உடன் இராஜினாமா செய்ய வேண்டுமென பிக்குமார் முன்னணியின் தேசிய அமைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்தார். கரு ஜயசூரிய தலைமையிலான தலைமைத்துவ சபை மூலம் ஐ.தே.க.வை நிர்வகிக்க வேண்டும். அச்சபையில் உறுப்பினர்கள் 05 பேருக்கும் 09 பேருக்கும் இடையில் அமைய வேண்டுமென்றும் தேரர் தெரிவித்தார்.
கட்சி தலைமைத்துவத்திலிருந்து விலகத் தீர்மானம் எடுப்பதற்காக இரு தினங்களை ரணில் கேட்டதாகவும், இன்று தீர்க்கமான நாள் என்றும் சுமங்கல தேரர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதனுடன் தொடர்பான வீடியோவை ஊடகங்களுக்கு அனுப்புவதாகவும் தொடர்ந்து அவர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment