சவுதியில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட தமிழ் பெண் பலாங்கொட வைத்தியசாலையில்

வுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று அங்கு பல இன்னல்களுக்கு முகங்கொடுத்த இலங்கை பணிப்பெண் ஒருவர் நாடு திரும்பி பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பலாங்கொட வேவல்வத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான பாப்பாத்தி என்ற பெண் 2012ம் ஆண்டு சவுதி அரேபியாவிற்குச் சென்றுள்ளார். 

தான் தொழிலுக்கு சென்ற நாள் தொடக்கம் வீட்டு உரிமையாளரான பெண் தன்னை சித்திரவதை செய்ததாக பாப்பாத்தி தெரிவித்துள்ளார். 

இரண்டு வருடங்கள் துன்புறுத்தப்பட்ட தான் ஒருநாள் மயக்கமடைந்ததாகவும் அப்போது வீட்டு உரிமையாளரான பெண் தன்னை வீதியில் போட்டுச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அதன்பின் சவுதியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் தன்னை நாட்டுக்கு திருப்பி அனுப்பியதாக அவர் கூறியுள்ளார். 

மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை பணிப்பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து நேற்று பாராளுமன்றிலும் கதைக்கப்பட்டது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :