போல்ட்டை விட என் 6 மாத நாய்க்குட்டி வேகமாக ஓடும் - பிரட் லீ

லக மின்னல் மனிதன் ஜமைக்காவின் உசைன் போல்ட்டை விட, எனது ஆறுமாத நாய்க்குட்டி வேகமாக ஓடுகிறது என அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தெரிவித்தார்.

36 வயதான இவர் டெல்லியில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது கூறியதாவது,

எனது வீட்டில் "ஜிஞ்சர்´ எனும் நாய்க்குட்டி வளர்த்து வருகிறேன். ஆறு மாதம் மட்டுமே ஆகும் இந்த குட்டி, வீட்டின் அனைத்து இடங்களிலும் துள்ளிக் குதித்து கொண்டிருக்கும்.

எப்போதும் கால்களை சுற்றியே வரும், இது உசைன் போல்ட் போல வேகமாக ஓடும். "டுவென்டி-20´ போட்டிகளில் பங்கேற்பதற்கு ஏற்ப, எனது உடற்தகுதி சரியாக உள்ளது என்றால் இதற்கு "ஜிஞ்சர்´ தான் காரணம். தவிர, முயல்கள், எலிகள் மற்றும் அனைத்து வகையான பறவை இனங்களும் வளர்த்து வருகிறேன்.

நான் ஒவ்வொரு முறையும், இந்தியா வரும் போது மிகவும் பெருமைப் படுவேன். ஏனெனில், வாழ்க்கையில் எப்படி நடப்பது, எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என, இந்தியா எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. இது எனது இரண்டாவது தாய் வீடு போன்றது.

இதேபோல, எதிர்வரும் தொடரில் ஆஸி. வீரர்களுக்கு நிறைய அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன். அடுத்த மாதம் ஆஷஸ் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடர், மிகவும் கைகொடுக்கும்.

இவ்வாறு பிரட் லீ கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :