
- எஸ்.அஷ்ரப்கான்-
களுத்துறை மாவட்ட தமிழ் மொழிமூல பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கான பயிற்சி செயலமர்வு நேற்று முன்தினம் (07) திங்கட்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பதியுதீன் மகா வித்தியாலயத்தில் மேல்மாகாண தமிழ் மொழிமூல உதவிக்கல்விப்பணிப்பாளர் செல்வி ஆர். நகுலேசபிள்ளை தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த பயிற்சிநெறிகள் வார நாட்களில் 38 நாட்கள், 300 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக சிறந்தவளவாளர்களைக் கொண்டு நடைபெற்று வருகின்றது.
இந்த ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக கொழும்பு வலயக்கல்விப்பணிப்பாளர் ஜெயந்த விக்ரமநாயக்க மற்றும் விசேட அதிதிகளாக களுத்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் அலவி, பேராசிரியர், வளவாளர் சந்திரசேகரன், மேல்மாகாண தமிழ்மொழிமூல கல்விப்பணிப்பாளர் ஐ.எல்.எம். இன்ஸார், மேல்மாகாண ஆரம்பக்கல்வி பணிப்பாளர் திரு துஷ்மந்த, கொழும்பு தமிழ்மொழிமூல பிரதிக்கல்விப்ணிப்பாளர் திருமதி ரீ. ராஜரட்ணம், களனி வலயக்கல்விப்பணிப்பாளர் திரு ரீ. கணேசராஜா, பிலியந்தல வலயக்கல்விப்பணிப்பாளர் எம். அப்துல்காதர், சிரேஷ்ட விரிவுரையாளரும், ஆசிரிய ஆலேசகரும், வளவாளருமான வி. தியாகராஜா, ஹோமாகம வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சகுந்தலா மனோகரன், களனி வலய ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஜனாப் பர்ஸானா அக்பர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கடந்த (01.10.2013)திகதி பட்டதாரி ஆசியர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட சுமார் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி செயலமர்வு இங்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



0 comments :
Post a Comment