அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவு வுஸ்ட்டா சிறுவர் விளையாட்டு கழகத்தின் விளையாட்டுப் போட்டி



(எம்.பைஷல் இஸ்மாயில்)

ட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவு வுஸ்ட்டா சிறுவர் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டி நேற்று (05) சனிக்கிழமை அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.றுமைஸா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் கல்முனை மாவட்ட சாரணிய உதவி ஆணையாளர் எஸ்.எல்.முனாஸ், பாடசாலையின் உதவி அதிபர் எஸ்.ஏ.பாயிஸ், அட்டாளைச்சேனை வலய உதவி முகாமையாளர் ஏ.ஜே.எம்.அனீஸ், சமூக அபிவிருத்தி உதவியாளர் ஏ.எஸ்.எம்.உனைஸ், சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.எப்.நவாஸ் மற்றும் சமுர்த்தி சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு நடைபெற்ற 50 மீற்றர் ஓட்டப்போட்டி, ஊசியில் நூல் கோருத்தல், போத்தலில் தண்ணீர் நிறைத்தல், பலூன் உடைத்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

இப்போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற சிறுவர்களுக்கான பரிசிகளையும் சான்றிதழையும் அதிதிகளினால் வழங்கி வைத்ததுடன் இந்த போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய சிறுவர்களை பாராட்டி எதிர்வரும் காலங்களில் இன்னும் திறன்பட விளையாட்டில் ஈடுபடவேண்டும் எனவும் தெரிவித்தனர்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :