ஆயுதப் பலத்தால் தோற்கடிக்கப்பட்ட அமைப்பொன்றுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியமையானது அரசாங்கம் செய்த மிகப் பெரிய தவறு என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார் .
அனுராதபுரத்தில் நடைபெற்ற அந்த அமைப்பின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார் . அவர் மேலும் தெரிவித்துள்ள தகவலில் ,
இலங்கை அரசாங்கம் ஒரு மிகப் பெரிய தவறை செய்துள்ளது. உலகில் எங்கும் நடைபெறாத வகையில் தூரநோக்கற்ற முட்டாள்தனமான தீர்மானத்தை இந்த அரசாங்கம் எடுத்துள்ளளது.

எதிர்காலத்தில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் இந்த அரசாங்கம் கட்டாயம் அதற்கு பொறுப்புக் கூறவேண்டும். உலகில் எங்கும் ஆயுதத்தினால் தோற்கடிக்கப்பட்ட எந்த அமைப்புக்கும் அரசியலில் ஈடுபட அனுமதி வழங்கப்படவில்லை.
பிரிவினைவாதத்தின் மூன்று முனைகளில் ஆயுத முனையை நாம் தோற்கடித்தோம். அரசாங்கத்தினால் அதன் அரசியல் முனையை தோற்கடிக்க முடியாமல் போயுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரனை தெரிவு செய்துள்ளது.

அவரால் சர்வதேசத்துடன் சிறந்த முறையில் பேச முடியும். இதனால் பிரிவினைவாதம் புதிய கோணத்தில் ஆரம்பமாகியுள்ளது. விக்னேஸ்வரன் வடக்கை கேட்கின்றார். ரவூப் ஹக்கீம் கிழக்கை கேட்கின்றார்.
இதனால் வீதிகளை நிர்மாணிப்பதையும் ஆசியாவின் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதற்கும் முன்னர் இலங்கையின் வரலாற்று உரிமை யாருக்கு இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அப்படி உறுதிப்படுத்தாது போனால் சிங்கள பௌத்தர்களின் இந்த உரிமை போராட்டத்தில் வெற்றி பெற முடியாது. சிங்களவர்களை தவிர ஏனைய அனைவருக்கும் ஒரு நோக்கம் இருக்கின்றது. இதனால் நாட்டை பாதுகாக்க தர்ம யுத்தம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். (L M)

0 comments :
Post a Comment