( எஸ்.அஷ்ரப்கான் )
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பருத்தித்துறை முனையிலிருந்து காலிமுகத்திடல் வரையில் வாகனப்பேரணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் கடந்த வாரம் ஆரம்பமான இந்த வாகனப் பேரணியினை, ஊடக அமைச்சின் செயலாளர் ஹேரத் மற்றும் வட மாகாண ஆளுணர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் ஆரம்பி்த்து வைத்தனர்.
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள 54 நாடுகளின் தேசியக்கொடிகளைத்தாங்கியவாறு 30 நாட்களுக்குநடைபெறவுள்ள இந்த வாகனப்பேரணியானது இலங்கையின் முக்கிய நகரங்களினுாடாக செல்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று (06) ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு நகரிலிருந்து புறப்பட்ட இந்த வாகனப்பேரணி கல்முனை நகரினை மதியம் 12 மணிக்கு வந்தடைந்தது. இந்து கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல், கல்முனை பொலிஸ் உயர் அதிகாரிகள், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் சாய்ந்தமருது இளைஞர் நிலைய பொறுப்பதிகாரிகள், மாணவர்கள், வளவாளர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம். றிஸான், பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். றியாஸ், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் பிரத்தியேகச் செயலாளர் எம். தௌபீக் உட்பட உயர்அதிகாரிகளும் பொதுமக்களும் இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டு வாகனப்பவனியில் கையெழுத்திட்டனர்.
இந்த ஊர்வலம் மீண்டும் காரைதீவு, சம்மாந்துறை ஊடாக அம்பாரை நகரைச் சென்றடைந்தது.

0 comments :
Post a Comment