அமைச்சரின் மகனுக்கு ஆகக் கூடிய விருப்பு வாக்கு

த்திய மாகாண சபை தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்ட காணி மற்றும் காணி மறுசீரமைப்பு அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் மகன் பி.வி.தென்னகொன் ஆகக் கூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக பி.வி.தென்னகொன் 51,591 விருப்பு வாக்குகளையும் பந்துல யலேகம 45,460 விருப்பு வாக்குகளையும் பராக்ரம திசாநாயக்க 24,686 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ரஞ்சித் அலுவிகார, 29,545 விருப்பு வாக்குகளையும் சஞ்சீவ கவிரத்ன 24,249 விருப்பு வாக்குளையும் ரொகான் பண்டாரநாயக்க 14,415 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, இந்த மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ஒருவர் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :