-எஸ்.அஷ்ரப்கான்-முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1325 வது பிரேரணை தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு இன்று (22) ஞாயிற்றுக்கிழமை கல்முனை வாடிவீட்டு வீதியில் அமைந்துள்ள அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.
அமைப்பின் கிழக்கு மாகாண சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எஸ். ஜெலீல் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அமைப்பின் ஊடகத்துறை இணைப்பாளரும் ஊடகவியலாளருமான அப்துல் அஸீஸ் மற்றும் கிழக்கு மாகாண சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எஸ். ஜெலீல் ஆகியோரும் வளவாளராக கலந்து கொண்டு ஐக்கிய நாடுகளின் 1325 2000 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பாக விளக்கமளித்தனர்.


0 comments :
Post a Comment