இலங்கை - தென்னாபிரிக்க அணிகள் மோதும் T20 இன்று

லங்கை தென்னாபிரிக்க அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகிறது.

இலங்கை வந்துள்ள சுற்றுலா தென்னாபிரிக்க அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதலில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.

இதில் இலங்கை அணி 4,1 என்ற கணக்கில் அபாரமாக வென்றது. கொழும்பு மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி ஒருநாள் போட்டியிலும், தென்னாபிரிக்க அணி 128 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்களை குவித்தது.

தில்ஷன் 99, திரிமன்னே 68, சங்கக்கரா 75 ஓட்டங்களை விளாசினர். அடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்கா 43.5 ஓவரில் 179 ஓட்டங்களுக்கு சுருண்டது. தலைவர் டிவில்லியர்ஸ் 51, டிகாக் 27, மெக்லாரன் 29 ஓட்டங்கள் அம்லா, பாங்கிசோ தலா 18 ஓட்டங்கள் அடிக்க, மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இலங்கை வீரர்கள் தில்ஷன் ஆட்ட நாயகன் விருதும், சங்கக்கரா தொடர் நாயகன் விருதும் பெற்றனர். இரு அணிகளும் அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன.

முதல் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :