திருகோணமலையில் 2006ஆம் ஆண்டில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையின்12 அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அவர்களை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ.எல்.அஸ்ஹர் நேற்று (01) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசேட பிரேரணை மூலம் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் ஏ.எல்.அஸ்ஹர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடந்த 4ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை கடந்த 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.
உதவி பொலிஸ் அதிகாரி உட்பட 11 பொலிஸ் விசேட அதிரடிப்படையினருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்து காத்திருந்த 4 மாணவர்களும் மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றிருந்த மாணவர் ஒருவருமே 2006ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment