-எஸ்.அஷ்ரப்கான்-
எமது முஸ்லிம் சமூகம் தேசிய உணர்வுள்ள சமூகமாக என்றும் மிளிர வேண்டும் என தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் எஸ்.எம். முகம்மதுஇஸ்மாயில் விடுத்துள்ள புனித நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.அச்செய்தியில் தொடரந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ரமழான் முஸ்லிம்களுக்கு மத்தியில் விமோசனத்தை ஏற்படுத்துகின்ற மாதமாகும்.
அந்த மாதம் நிறைவுபெறுகின்றபோது அவர்கள் தமது கூலிகளைப் பெற்றுக்
கொள்கின்றனர். பாவங்களைச் சம்பாதித்தவர்கள் மீட்சி பெற்று விமோசனம்
பெறுகிறார்கள். நன்மைகளிலே வாழ்ந்தவர்கள் முத்தகீன்களாக (இறையச்சம்)
தங்களை மாற்றிக் கொள்கின்றார்கள். இப்படிப்பட்ட நல்ல சகுனங்களைப்
பெறுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் நமது நாட்டின் வரலாற்றில் ஒன்றரக்
கலந்திருக்கின்ற நாம் நம்மிடமுள்ள தேசிய உணர்வினை என்றுமே
விட்டுக்கொடுக்கக் கூடாது.
'ரமழான்” என்ற அறபுப்பதம் 'கரித்தல்' என்ற பொருளையும் கொள்ளும்.
உண்மையில் ரமழான் மனித சமூகத்தின் பாவங்களைக் கரிக்கின்ற மாதமாகும்.பாவங்களிலிருந்து மீட்சி பெறவும் நரகத்திலிருந்து விடுதலை பெறவுமான வழிவகைகளை இந்த மாதம் கொண்டிருக்கிறது.

எனவே, நாம் திருந்திக்கொள்ளக்கூடியஒரு சந்தர்ப்பத்தினை ரமழான் நமக்குத் தருகிறது. ஒவ்வொரு வருடமும் நமக்குஇந்தச் சந்தர்ப்பம் உருவாகிறது.
மனிதன் பாவம் செய்யக் கூடியவன் என்றநிலையிலிருந்துதான் அல்லாஹ் நமக்கு இத்தகைய சந்தர்ப்பங்களை உருவாக்கித்தருகிறான். எனவே, வெற்றி, விமோசனம் என்பது நம்மை விட்டுத் தவறக்கூடிய
விசயமல்ல.
நமது முயற்சிகளிலேதான் அது தங்கியிருக்கின்றது. இந்த
வெற்றியினை மனித சமூகம் சந்திக்கின்ற தினங்களில் ஒன்றாகவே நான் இந்தப்பெருநாள் தினத்தினைப் பார்க்க விரும்புகின்றேன்.
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்த நாட்டின் வரலாற்றோடு மிகநெருக்கமாகப் பின்னிப்பிணைந்தவர்கள். சிங்கள இராசதானிகளின் மிகநெருக்கமான உறவு அவர்களுக்கு இருந்து வந்திருக்கிறது.

இதன்மூலம்எப்போதுமே முஸ்லிம்கள் நமது நாடு, நமது தேசம் என்ற தேசிய உணர்விலிருந்துவிடுபட்டவர்களில்லை. இந்தத் தேசிய உறவு நாம் உரிமை கொண்டாடக்கூடியதும்நமக்குச் சொந்தமானதுமாகும்.
எனவே, எந்தச் சந்தர்ப்;பம் வருகின்றபோதும்நாம் இந்த உணர்வினை விட்டு விலகிச் செல்லக் கூடாது. இஸ்லாமியக் கொள்கைகள்
சார்ந்த விசயங்களிலும் ஒரு முஸ்லிமுக்கு தான் வாழ்கின்ற நாட்டின் மீது
பக்தியும் சிரத்தையும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றது.
சமூக அரசியல் சூழ்நிலைகள் சிலவேளைகளில் நமக்குப் பாதகமாக அமையக் கூடும்.அந்தக் கட்டங்களில் உணர்வு நிலைகளை விட அறிவினைப் பிரயோகிக்கிற சமூகமாகநாம் இருக்க வேண்டும். மிக நிதானத்தோடும், புத்தி சாதுரியத்தோடும் அந்தச்சந்தர்ப்பங்களை நாம் வென்றெடுக்கக் கூடியவர்களாக மாற வேண்டும்.

ஒருமுஸ்லிமின் வாழ்க்கையில் பக்கத்து வீட்டுக்காரர் மிக முக்கியம்
பெறுகின்றான்.
பெறுகின்றான்.
வடக்கு – கிழக்கில் நமக்கு இருக்கின்ற பக்கத்து உறவு தமிழ்
சமூகமாகவும், தென்னிலங்கையிலே சிங்களச் சமூகமாகவும் இருக்கின்றது.

எனவே,இந்தப் பெருநாள் சந்தர்ப்பத்தில் நமது மகிழ்ச்சியினை அவர்களோடும்
பகிர்ந்துகொண்டு நமது பலகாரங்களை அவர்களுக்கு வழங்கிக் கொண்டும்
வாழ்கின்ற உறவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது சமூக உறவின் மிக முக்கியமான அம்சமாகும். இவ்வாறு நமது இஸ்லாமிய ஆன்மீக, லௌகீக வரலாறுபல்லினச் சமூகங்களுக்கு மத்தியில் வாழ்கின்ற வழிமுறைகளை மிகவும்மேம்படுத்தியிருக்கிறது.
இஸ்லாம் கூறுகின்ற மிகப் பெரிய மற்றுமொரு தத்துவம் 'தொழுகையைக் கொண்டும்பொறுமையைக் கொண்டும் உதவி தேடுகின்ற சமூகமாக” நாம் மாற வேண்டும்.

இதற்குப் பின்னால் இருக்கின்ற செய்தி ஒருவகையில் நிதானமும்பத்திசாதுரியமுமே.
எனவே, இத்தகைய வரலாற்றுப் பாடங்களைச் சுமந்த நாம்நமது பாவச் சூழ்நிலைகளிலிருந்து வெற்றி பெறுவது போல மீள மீள நாம்விமோசனம் பெறுவது போல தேசத்து உணர்வுகளிலிருந்து – தேச பக்தியிலிருந்துநாம் விடுபட்டு விடக்கூடாது.
நாம் இந்த நாட்டின் பங்குதாரர்கள் என்பதிலேஎந்தவிதச் சந்தேசமுமில்லை அந்த உரிமையுடனும் விட்டுக்கொடுப்புடனும் வாழநாம் பழகிக்காள்வோமாக என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment