கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தி



 -அகமட் எஸ். முகைடீன்-

புனித நோன்புப் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய உள்ளங்களுக்கு சாந்தி சமாதானம் சௌபாக்கியம் ஏற்பட எல்லாம் வல்ல இறைனை பிரார்த்திப்பதாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த ரமழான் மாதத்தில் பேணிவந்த நற்பண்புகளையும், நற்செயல்களையும், இறை அச்சத்தையும் எமது வாழ்நாள் முழுவதும் பேணிவருவதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற்றவர்களாக மாற முயற்சிக்க வேண்டும்.

நாட்டு மக்கள் மத்தியில் சமத்துவம், சகோதரத்துவம், சுபீட்சம், இனங்களுக்கு இடையிலான ஐக்கியம் என்பவற்றை தழைத்து ஓங்கச் செய்யும் திருநாளாக இப்புனித நோன்புப் பெருநாள் அமைய வேண்டும்.

புனித ரமழான் மாதத்தில் பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அமல்கள் பலவற்றை புரிந்து புடம்போடப்பட்ட இஸ்லாமிய உள்ளங்களாய் அல்லாஹ்வுடைய அன்பையும் அருளையும் நாடி நிற்கும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் இம்மையும் மறுமையும் சிறக்க, வாழ்வில் வளம் கொழிக்க இதயம் கனிந்த இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை சமர்ப்பிக்கின்றேன் எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :