நியூஸிலாந்தில் பால்மாக்கள் இறக்குமதி செய்வதற்கு தற்காலிக தடை விதிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகள் கடுமையான சேதனையின் பின்னரே சந்தைக்கு விடப்படும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தமது உற்பத்திகளான குழந்தை பால்மா உட்பட்ட விளையாட்டுக்கு ஊக்கம் தரும் பானங்களில் பக்றீரியா நச்சுத்தன்மை இருக்கலாம் என்று நியூஸிலாந்தின் பொன்டிரா நிறுவனம் அறிவித்தமையை அடுத்தே சுகாதார அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது.
அத்துடன் 2012ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 3 வகையான உற்பத்திகளில் அடங்கியுள்ள குளொஸ்டேரியம் (Clostridium) பக்றீரியாவே இந்த நச்சுத்தன்மைக்கு காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள பொன்டிரா நிறுவனம் தரமான உற்பத்திகளை உறுதிப்படுத்துமாறு தமது முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
எனினும் இந்த நச்சுத்தன்மை காரணமாக ஏதாவது சுகவீனங்கள் ஏற்பட்டதாக இதுவரை கண்டறியப்படவில்லை என்று பொன்டிரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

0 comments :
Post a Comment