முஸ்லிம்கள் இந்த நாட்டில் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர் -கமால்மௌலவி


(எஸ்.அஷ்ரப்கான்)
மூவின மக்கள் வாழும் இந்நாட்டிலே நாங்கள் முஸ்லிம்கள் என்ற வகையில்
எப்படி தொழிற்பட வேண்டுமென்ற உறுதியானதொரு வரைபு எங்களிடம் இல்லை.

இதனால்தான் தற்போது நாங்கள் இந்த நாட்டில் பல்வேறு துன்பங்களையும்
இன்னல்களையும் அனுபவித்து வருகிறோம் என அஷ்-ஷெய்க் என்.ஜீ. அப்துல் கமால்மௌலவி தெரிவித்தார்.

செறோ ஸ்ரீலங்கா அமைப்பின் றமழான் சிறப்புரையும் இப்தார் நிகழ்வும்
அமைப்பின் தலைவர் சட்டத்தரணி றினோஸ் ஹனீபா தலைமையில் கல்முனைஅல்-மிஸ்பாஹ்வித்தியாலயத்தில் அன்மையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே மௌலவி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் சிறப்புரையில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்த நாட்டிலே வாழுகின்ற முஸ்லிம்களையும் அவர்களுடைய எதிர்காலத்தையும்பொறுத்தவரையில் இந்த காலகட்டத்தில் இந்த தலைப்பில் பேசுவது கூட ஒருசிக்கலான விடயமாகும். இருந்தாலும் எங்களுடைய விவகாரங்களை நாங்கள்பேசித்தான் ஆகவேண்டும் என்ற தேவையும் எம்முன் இருக்கிறது. அந்த வகையிலேஇந்த நாட்டிலே முஸ்லிம் சமூகத்தின் மூலமாக பிரச்சினைகள் வந்ததில்லை. 

ஒருபிரச்சினைக்கு மூல கர்த்தாக்களாக முஸ்லிம்கள் இருப்பதுமில்லை. ஆனால்மறைமுகமாக எங்களால் சில பிரச்சினை இருக்கிறது.

 அது எத்தகையபிரச்சினைபொதுவாகச் சொல்லுவார்கள் இஸ்லாத்தினுடைய இரண்டு அடிப்டைகள் ஒன்று நாங்கள்ஏற்றிருக்கக் கூடிய கலிமா தௌஹீத் ( ஓர் இறைக்கொள்கை ) இது ஒரு அடிப்படை.இரண்டாவது அடிப்படை அந்தஓர் இறைக்கொள்கையில் உறுதியாக நிற்பதென்பது.

கலிமதுத் தௌஹீதை நாங்கள் ஏற்றிருக்கிறோம். ஆனால் அதே கலிமா தௌஹீதில்தௌஹீதில் கலிமா என்று சொல்லுவார்கள். அதில் நாங்கள் ஓரணியாக நிற்பதிலேஎங்களுக்குள் நிறைய பிரச்சினை எங்களுக்குள் இருக்கிறது. 

அவற்றுக்கானநிறைய காரணிகளையும் நாங்கள் சொல்லலாம். குறிப்பாக சொல்வதாக இருந்தால்உலகிலே நடக்கக்கூடிய எந்தப்பிரச்சினையாக இருந்தாலும்இ அது தனி மனிதனாக,குடும்பமாக, சமூகங்களாக எவ்வாறாக இருந்தாலும் அறிவினுடையசெல்வாக்குமிகப்பெரிய இடத்தைப் பிடிக்கிறது. 

எந்தவொரு காரியமாக இருந்தாலும் அதில்முழுமையான அறிவில்லை என்றால் அங்கே பிரச்சினை வரும். அறிவுபூர்வமாகஎதனையும் அனுகத் தெரியவில்லை என்றால் அங்கே பிரச்சினை வரும்.

இன்று முஸ்லிம் சமூகத்தைப்பொறுத்தவரையிலே அறிவு என்பதொரு மிகப்பெரியகுறைபாடாக இருக்கிறது. நான் இங்கே சொல்லும் விடயம் நிறையப்பேர் படித்துபெரும் பதவிகளில் இருக்கிறார்கள். பல்வகையான அறிவுகள் இருக்கின்றன. 

ஒருசமூகம் தன்னுடைய ஸ்திரமான இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு தேவையானஅறிவுபூர்வமான அனுகுமுறை முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையிலேகுறைவாகத்தான் இருக்கிறது. அது பெரியதொரு சவாலாகவும் இருக்கிறது.


அந்தவகையில் இரண்டு பகுதிகளை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
முதலாவது இந்த நாட்டிலே வாழுகின்ற முஸ்லிம்கள் ஏற்றிருக்கக்கூடிய கொள்கை'லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்துர் ரஸூலுள்ளாஹ்' என்பதாகும். 

முஸ்லிம்சமூகமென்பது ஒரு கொள்கைவாத சமூகமாகும். கலிமா என்கின்ற ஒருகொள்கைக்காகத்தான் முஸ்லிம்கள் இணைந்தவர்கள். அந்த கொள்கையிலேஇணைந்தவர்கள் புரிந்கொள்ளவேண்டிய நிறைய அம்சங்கள் இருக்கின்றது. 

அதிலேஇன்னுமொரு சமூகத்தோடு உறவை ஏற்படுத்திக்கொள்கின்ற கொள்கை. பொதுவாக பலதரப்பினரோடு உறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் பல்வகையான அறிவுகள் எங்களுக்குத்தேவை. 

முஸ்லிம் சமூகத்தை விட்டுவிட்டு இன்னுமொரு புறம்மேற்கத்தேய சமூகத்தைப்பார்த்தால்முரண்பாட்டுக்குமத்தியில்எப்படிஉடன்பாட்டைக்காணமுடியும்என்கின்றவிடயத்தில்அவர்கள்பலகற்கை நெறிகளை உருவாக்கி அதில் பெரும்பட்டங்களைக் கூட முடித்து அதுபற்றியமாநாடுகள் கருத்தரங்குகள் பல்வேறு இடங்களில் அவர்கள்உருவாக்குகிறார்கள். 


சிலவேளைஅவர்களுடைய சிந்தனைக்குப்பின்னால் பல்வேறு சுயநலங்கள் இருக்கின்றன.இல்லை என்று சொல்வதற்கில்லை. முஸ்லிம் சமூகத்தை இல்லாமல் ஒழித்துவிடவேண்டுமென்ற மிகப்பெரும் சுயநலம்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த உலகத்திற்கு ஒரு கலாச்சாரத்தை அறிமுகம்செய்கிறார்கள். இஸ்லாம்அறிமுகம்செய்த கலாச்சாரம் எங்களால் அதனை முன்னெடுக்க வக்கில்லாதவர்களாகநாங்கள் இருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு சொந்தமில்லாத எங்களிடம் கடன்வாங்கிய ஒரு கலாச்சாரத்தை அவர்கள் சந்தைப்படுத்துகிறார்கள்.

 நாங்கள்அதிலே பலவீனர்களாக இருக்கிறோம். இங்கே முஸ்லிம்கள் என்ற வகையில் நாங்கள்ஒரு உண்மையை புரிந்துகொள்ளவேண்டும்.இன்னுமொரு இனத்தவரோடு சேர்ந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு இருக்கிறது. 

இலங்கையைப்பொறுத்தவரையில்அப்படியான ஒரு சூழலில் நாங்கள் இருக்கிறோம். அந்தவகையில் கொள்கைவாதசமூகம் என்ற அடிப்படையில் பார்க்கின்றபோது ஒரு உண்மை இருக்கிறது. 

அதுதான்முழுமனித இனமும் அல்லாஹ்வினுடைய படைப்பு என்ற ஒரு தத்துவத்தை குர்ஆன்சொல்கிறது. எனவே முழு மனித சமூதாயத்திற்கும் இறைவழிகாட்டலின் தேவைஅவசியம். அல்லாஹ்வினுடைய வழிகாட்டல் இந்த முழு சமூதாயத்திற்கும்சொந்தமானது. 

இந்த சமூகம் அனைத்தும் அல்லாஹ்வினுடைய படைப்பாகும். இந்த
அடிப்படையை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை தெளிவாக குர்ஆன்சொல்கிறது. உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் படைத்திருக்கின்றோம்.எதற்கென்றால் நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து வாழவேண்டும் என்பதற்காக பல்வகைகுழுக்களாக உங்களை அமைத்திருப்பதன்  பொருள் நீங்கள்பிரிந்திருப்பதற்கல்ல.  என்று அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

எமது இஸ்லாம் மார்க்கம் சொல்வது போன்று கொள்கைவாத சமூகமாக நாங்கள் இல்லை.எங்களுடைய கொள்கை அவர்களிடத்தில் பிரதிபலிக்கவேண்டும் என்பதுசாத்தியமில்லாமல் இருக்கிறது. 

ஆனால் அவர்களுடைய கலாச்சாரத்தை நாங்கள்உள்வாங்கிக்கொள்கிறோம்.

 இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கு ஒருபொறுப்பு இருக்கிறது. நாங்கள் எந்த இடத்தில் வாழந்தாலும்இ இருந்தாலும் தொழில் செய்தாலும் எங்களுடைய கொள்கை செல்வாக்குச் செலுத்த வேண்டும்.


ஆனால் இந்த நாட்டில் எங்களைப்பற்றி பரப்பி விடப்பட்டிருக்கின்ற
செய்திகளைப்பார்த்தால் எங்களுடைய பிழையான முன்மாதிரிகள்தான்
இஸ்லாத்திற்கு பேரிடியாக வந்திருக்கிறது. அவற்றில் சில உண்மைகள்
இருக்கின்றன. பல உண்மைக்குப் புறம்பானவைகளும் இருக்கின்றன. அவர்கள்கூறும் குற்றச்சாட்டுக்களை முழுக்க நாங்கள் நிராகரிக்க முடியாத நிலையில்இருக்கின்றோம்.

இந்த நாட்டு முஸ்லிம்கள் எம்மீது அபாண்டங்களை சொல்லும் அவர்கள் எங்கள்விடயத்தில் நீதியாக நடக்கிறார்களாஇ அநீதியாக நடக்கிறார்களாஇ
என்பதற்கப்பால் நாங்கள் இந்த விடயத்தில் நீதியாக நடக்கிறோமா என்பதை ஆழமாகசிந்திக்க வேண்டும்.

 ஏனெனில் நாங்கள் ஒரு கொள்கைவாத சமூகம் என்ற வகையில் மிக அவதானமாக முன்மாதிரியாக நடக்க முனைய வேண்டும். அதனுாடாக ஏனையசமூகங்கள் எமது நடவடிக்கையில் ஈர்ந்து கொள்ளப்படுவார்கள்.

எமது வாழ்க்கையின் அனைத்து விடயங்களையும் இஸ்லாம் கூறியபடி
அமைத்துக்கொள்வோமாக இருந்தால் இறைவனுடைய உதவியும் நேரடியாக எமக்குகிடைக்கும் அத்துடன் அந்நியர்களின் சூழ்ச்சிகளிலிருந்தும் நாம்
பாதுகாப்பு பெற முடியும். 

இந்த அடிப்படையை நாம் விளங்கி எமது வாழ்க்கையைநாங்கள்அமைத்துக்கொள்ளமுன்வரவேண்டும்என்றும்தனதுசிறப்புரையில்தெரிவித்தார்.

இந்த இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப்
சம்சுதீன்இ அல்-பஹ்றியா மகா வித்தியாலய அதிபர் எம். றஸாக்இ ஜமாஅதே
இஸ்லாமி அமைப்பினர்இ கல்விமான்கள்இ மாணவர்கள் ஆசிரியர்கள் அமைப்பின்அங்கத்தவர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :