வெலிவேரிய ஆர்ப்பாட்டத்திற்கு இராணுவத்தை அழைத்தது பொதுபல சேனாவே..!

மது கோரிக்கைக்கு அமையவே பாதுகாப்பு படையினர் வெலிவேரிய போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

சுத்தமான குடிநீரைக் கோரி வெலிவேரிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். இந்தப் போராட்டத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதனை அதாவனித்த நான், அது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்தேன். போராட்டம் கலகமாக வெடிக்கக் கூடும் என்ற அச்சத்தினால் நான் அவ்வாறு படையினருக்கு அறிவித்தேன். 

பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு படையினரிடம் கோரியிருந்தேன். குடிநீர்ப் பிரச்சினை அடிப்படையானது எனவும் அதற்கான தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் படையினரிடம் கோரியிருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இடம்பெற்ற துர்ப்பாக்கிய நிலைமை வருத்தமளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :