புல்மோட்டையில் படையினரால் அபகரிக்கப்படும் காணிகள் சம்மந்தமாக கலந்துரையாடல்



ஜனூவர்
புல்மோட்டையில் அண்மைக்காலமாக அரிசிமலை பொண்மலைக்குடா தேத்தாவடித்தீவுவீரந்தீவு மண்கிண்டிமலை பிரதேசங்களிலுள்ள காணிகள் படையினரால் அபகரிக்கப்பட்டஅதேவேளை கடந்த சில மாதங்களாக வெளிமாகாணங்களில் இருந்து வருகை தந்த பௌத்தபிக்குமார்கள் புல்மோட்டை பிரதேசத்தின் பல இடங்களில் பொது மக்களின் காணிகளைஅபகரிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது விடயமாக கடந்த ஜுலை மாதம் 23ம் திகதி இடம்பெற்ற மாகாண சபை அமர்வை இடையில் ஒத்தி வைத்து விட்டு விசேடமாக கி.மா.சபை உறுப்பினர் அன்வரின் வேண்டு கோளிற்கிணங்க புல்மோட்டை காணிப்பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர்தலைமையில் மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதில்கலந்து கொண்டு பேசப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இன்று 2013.08.01ம் திகதிகாலை 10 மணியளவில் முதலமைச்சர் தலைமையில் முதலமைச்சர் செயலகத்தில் கூட்டம்இடம்பெற்றது. 

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண கல்வி,காணி அமைச்சர் விமல வீரதிஸாநாயக வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமான் லெப்பை தவிசாளர் ஆரியவதி கலப்பதிபா.ம.உறுப்பினர் எம்.எஸ்தௌபீக் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர்,பிரியந்த பத்திரன ஆகியோரும் மாகாண காணி ஆணையாளர், புவிச்சரிதவியல் திணைக்களஉதவி முகாமையாளர் மாகாண புவிச்சரிதவியல் திணைக்கள பணிப்பாளர்,வன விலங்குதிணைக்கள உத்தியோகத்தர் மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவொன்றுபுல்மோட்டை காணிப்பிரச்சினை தொடர்பாக நீண்ட நேர கலந்துரையாடல் ஒன்றுமேற்கொள்ளப்பட்டு பல தீர்வுகள் எட்டப்பட்டுள்ளது.

அத்தீர்வுகளின் அடிப்படையில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளுக்கு எந்தவிதஇடையூறும் விளைவிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் காணிகள்அளவை செய்யப்படுவதனையும் உடனடியாக நிறுத்துவதாகவும் முடிவுகள் எட்டப்பட்டு அவைதொடர்பான திணைக்களங்களிற்கு எழுத்து மூலம் தொலை நகலினூடாக முதலமைச்சரினால்அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் அரசி மலை சார்ந்த பகுதிகளில் சுனாமியால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெகப்நிறுவனத்தினூடாக வழங்கப்பட்ட 05 வீடுகள்கடற்படையினரால் கம்பி வேலியிடப்பட்ட நிலையில் இன்னும் விடுவிக்கப்படாமை குறித்துமா.ச உறுப்பினர் அன்வர் குச்சவெளி பிரதேச செயலாளரிடம் எழுப்பப்பட்ட வினாவுக்கு தான்இது தொடர்பாக உரிய படை அதிகாரிக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியிருப்பதாகவும்விரைவில் விடுவிக்கப்படும் எனவும் கூறினார்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :