'இஸ்ரேலை வேரோடு வீழ்த்தும் பெரும்புயல் உருவாகிக் கொண்டுள்ளது'

ஸ்ரேலை வேரோடு வீழ்த்தும் பெரும்புயல் உருவாகிக் கொண்டுள்ளது என ஈரான் அதிபர் அஹமதினெஜாத் இன்று அறிவித்தார். ஈரான் புதிய அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த ஜுன் மாதம் 14-ம் தேதி நடைபெற்றது.

இதில் ஹசன் ரவுகானி அமோக வெற்றி பெற்றார். வரும் ஞாயிற்றுக்கிழமை ஈரானின் புதிய அதிபராக அவர் பதவி ஏற்கிறார். இந்நிலையில், இன்று தலைநகர் டெஹ்ரானில் தனது ஆதரவாளர்கள் இடையே அதிபர் அஹமதினெஜாத் பேசியதாவது:-

சியோனிச அடிப்படை கொள்கைகளை வேரறுக்கக் கூடிய பெரும்புயல் வந்துக் கொண்டிருக்கிறது என ஆண்டவனை சாட்சியாக வைத்து உங்களுக்கு அறிவிக்கிறேன். இஸ்ரேலுக்கு இந்த பிராந்தியத்தில் இடமே இல்லை.

மத்திய கிழக்கு நாடுகளை பயமுறுத்தி பணிய வைக்க இஸ்ரேலும் மேற்கத்திய நாடுகளும் முயற்சித்து வருகின்றன. சிரியா மற்றும் எகிப்தில் அரங்கேறி வரும் சம்பவங்களை பார்த்து அந்நாடுகள் மகிழ்ச்சி அடைகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :