கடல் நடுப்பகுதியில் கொழும்பு தெற்கு துறைமுகம் பொதுமக்கள் பார்வையிடலாம்

டலின் நடுவே அமைக்கப்படவுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 13ஆம் திகதிவரை பொதுமக்களுக்கு அநுமதி வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.


400 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு தெற்கு துறைமுகத்தின் முதற்கட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 5ஆம் திகதி திறந்து வைக்கிறார்.


கடலின் நடுவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் நேரில் காண அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைக் கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதோடு 2016 இல் துறைமுக விஸ்தரிப்பு பணிகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :