வேர்க்கடலை சாப்பிட்ட இரண்டு வயது சிறுவனுக்கு மாரடைப்பு!

ந்தியாவின் மும்பையில் வேர்க்கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் ஒருவன் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த ரித்தேஷ், தாமினி, இவர்களது மகன் கிருஷ்ணா, வயது இரண்டு. ஆப்பார்ட்ம்மென்டில் வசிக்கும் இவர்களது மகன் இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டின் வெளியில் உட்கார்ந்து வேர்கடலை சாப்பிட்டு கொண்டிருன்தான்.

அந்த நேரத்தில் பக்கத்து வீட்டுகாரர் கிருஷ்ணாவின் முதுகில் ஆசையாக தட்டி சென்றுள்ளார்.

இதனை அடுத்து கிருஷ்ணாவுக்கு தொடர்ச்சியான இரும்பலும் மூச்சடைப்பும் ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்ட கிருஷ்ணாவிற்கு தண்ணீர் கொடுத்தும் அசுவாசப்படுத்திய பின்னும் அழுகையும் சிரமும் நிற்கவில்லை.

இதற்கு வேர்கடலை தான் காரணம் என்று தெரியவந்த நிலையில் உடனடியாக கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஸ்கேன் செய்து பார்த்ததில் வேர்கடலை சிக்கி கொண்டதற்கான நிலை ஏதும் இல்லை. சிறிது நேரத்தில் கிருஷ்ணாவுக்கு வளிப்பும் வந்தது, இந்த நிலையில் அவனது தொண்டை, மூச்சுகுழாய் வழியே சென்ற வேர்கடலை நுரையீரலில் சென்று அடைத்து கொண்டதால், ஆக்ஸிஜன் செல்ல வழியில்லாமல் சிறுவனுக்கு வளிப்புடன் மாரடைப்பு வந்துள்ளது என்பது தெரிந்தது.

சிறுவன் மூச்சுவிடப்பட்ட அவதியை பார்த்து அவனது பெற்றோர், உறவினர் துயரத்தில் ஆழ்ந்தனர்.

பின்னர் செயற்கை சுவாச கருவிகள் பொறுத்தப்பட்டு, சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டார். இதனை அடுத்து சிறுவன் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு வயது சிறுவனுக்கு வேர்கடலை சாப்பிட்டதால் வந்த மாரடைப்பு அனைத்து தரப்பினரையிம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிறுவர்கள் உன்பதையும், அவர்களை வளர்ப்பதிலும் இந்த காலக்கட்டத்தில் மிகுந்த கவனம் கொள்ளவேண்டியுள்ளது என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :