.jpg)
கேரளத்து வரவான லட்சுமி மேனன், குத்து பாடலுக்கு செமத்தியாக ஆட்டம் போட்டுள்ளார்.
தமிழில் கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப் புலி போன்ற படங்களில் நடித்தவர் லட்சுமி மேனன்.
இவர் தற்போது சித்தார்த்துடன் ஜிகர்தண்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதில் இட்லி கடை நடத்தும் பெண்ணாக வரும் லட்சுமி, இதற்காக பிரத்யேக பயிற்சிகளை எடுத்துக் கொண்டாராம்.
அதாவது, மதுரைக்கு சென்ற அவர் அங்குள்ள கடைகளுக்கு சென்று எந்த முறையில் இட்லி தயாரிக்கிறார்கள், கடை எப்படி நடக்கிறது, வாடிக்கையாளர்கள் என்னவெல்லாம் கேட்பார்கள் என கேட்டு தெரிந்து கொண்டாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜிகர்தண்டா படத்தில் இட்லி விற்கும் பெண்ணாக வருகிறேன்.
இதற்காக சில கடைகளுக்கு சென்று கவனித்தேன், இது எனது கதாபாத்திரத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்.
அத்துடன் இப்படத்தில் குத்துப்பாடல் ஒன்றிற்கும் நடனமாடி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
கவர்ச்சியாக நடிக்க மறுத்து வந்த லட்சுமி, குத்தாட்டம் போட்டுள்ளது மற்ற நடிகைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment