அட்டாளைச்சேனை ஐடியல் சமூக அமைப்பு ஏற்பாடு செய்த கலை விழா- புகைப்படங்கள்


























(எம்.பைஷல் இஸ்மாயில்)

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அட்டாளைச்சேனை அஷ்ரப் விளையாட்டுக்கழகம் ஏற்பாட்டு செய்த (ஐPடு) லீக் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வின் நேற்று (10) முன்தினம் காலை மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இவ்விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு அஷ்ஷெக் ஏ.கே.சஹிகத் தலைமையில் நேற்றிரவு (11) அட்டாளைச்சேனை கடற்கரையில் இடம்பெற்றது. இதில் தலையனைச் சன்டை, பனிஸ் சாப்பிடுதல், போத்தலில் நீர் நிறப்புதல், கயிறு இழுத்தல், வினோத உடை, யானைக்கு வால் வைத்தல் போன்ற பல போட்டி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இப்போட்டி நிகழ்ச்சியில் பெரியோர் முதல் சிறுவர் வரையிலானவர்கள் பங்கு பற்றியதும் விஷேட அம்சமாகும். இந்த இறுதிநாள் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், விஷேட அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், கௌரவ அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், உதவித் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், அட்டாளைச்சேனை பிரதேச அனைத்து விளையாட்டுக் கழக சம்மேளனத்தின் தலைவர் ஹம்ஸா சனூஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பணப்பொதிகள் மற்றும் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.

இப்போட்டி நிகழ்ச்சிகளை கண்டு கழிப்பதற்காக ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :