ஐ. தே. க. ஒரு தேர்தல் தொகுதியில் கூட வெற்றிபெறாது ; அமைச்சர் மஹிந்த சவால்!

டக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளில் தேர்தலில் ஐ. தே. க. ஒரு தேர்தல் தொகுதியில் கூட வெற்றிபெறாது என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

முடிந்தால் ஒரு தொகுதியையாவது ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றுக் காட்டட்டும் என்றும் அமைச்சர் சவால் விடுத்தார்.

தங்க இறக்குமதிக்கான வரியை அதிகரிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

“நடைபெறவிருக்கும் 3 மாகாண சபைகளிலும் ஆளும் ஐ. ம. சு. மு. கட்சிக்கு மக்களின் பூரண ஆதரவு கிடைக்கும். ஆளும் கட்சி மீது மக்கள் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை இந்நாட்டு மக்களும், சர்வதேசமும் அறிந்துகொள்ளும்.

ஐ. தே. க. வின் உறுப்பினர்கள் பலர் ஆளும் தரப்புடன் இணைந்து கொள்ளத் தயாராகவுள்ளனர். ஐ. தே. க. மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒரு தேர்தல் தொகுதியைக் கூட ஐ. தே. க.வால் வெற்றிகொள்ள முடியாது” என்றும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :