இன்று முதல் அரசாங்க தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வி அமைச்சு

நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்க தமிழ், சிங்கள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக இன்று (02) மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை களுக்காக செப்டம்பர் 02 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்பட்ட சகல முஸ்லிம் பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைளுக்காக எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் க. பொ. த. (உ/த) பரீட்சை மண்டபங்களாக பயன்படுத்தப்படும் முஸ்லிம் பாடசாலைகள் மட்டும் செப்டம்பர் 02 ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :