-நிருபர்-
பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் சியாம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. ஒகஸ்ட் 27ம் திகதி வரை வாஸ் குணவர்த்தனவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக இம்போட் மிரசெய்தியாளர் தெரிவித்தார்.
வாஸ் குணவர்த்தன அவரது புதல்வர் ரவிந்து குணவர்த்தன உள்ளிட்ட 9 சந்தேகநபர்கள் இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம்.சஹாப்தீன் இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை இன்று (14) பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய 9வது சந்தேகநபர் எதிர்வரும் 21ம் திகதி காலி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள வழக்கில் ஆஜராக வேண்டும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment