அம்பாறை மாவட்ட இணையத்தின் மாதாந்த ஒன்று கூடலும், சிறுதிட்ட நிதி வழங்கும் நிகழ்வும் !!



-நெளசாத்-
ம்பாறை மாவட்ட இணையத்தின் மாதாந்த ஒன்று கூடலும், சிறுதிட்ட நிதி வழங்கும் நிகழ்வும் !! அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையமானது டயகோணியா சர்வதேச அமைப்பின் நிதியுதவின் கீழ் பிரதி மாதந்தோரும் இடம்பெற்று வருகின்ற மாதாந்த ஒன்று கூடல் ஆனது இணையத்தின் தவிசாளர் திரு: வ.பரமசிங்கம் அவர்களின் தலைமையில் 15-08-2013 ஆந் திகதி வியாழக்கிழமை இணையத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது இணையத்தின் இவ்வாண்டுக்கான செயற்பாடுகளில் ஒன்றான தனது அங்கத்துவ அமைப்புக்களான PPDS, YMCA, MAHASAKTHI FOUNDATION, EWA - POTTUVIL, MARUMALARCHI - ADDALAICHENAI, WDF ஆகிய ஆறு அமைப்புக்களுக்கு இம்முறை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சிறுதிட்ட முன்மொழிவுக்கான நிதி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு: வே.ஜெகதீசன் (SLAS) அவர்களும், அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி இணைப்பாளர் ஜனாப்: எம்.ஐ.இஷாக் அவர்களும் இத்துடன் அதன் முகாமைத்துவ உதவியாளர் ஜனாப்: எம்.ஐ.சியாத் அவர்களும், மற்றும் இணையத்தின் அங்கத்துவ நிறுவனங்களின் பிரதிநிதிகள் 20 பேர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது பிரதேச செயலாளர் மற்றும் அபிவிருத்தி இணைப்பாளர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :