முசலி மஹிந்தோதய பாடசாலை துரிதமாக அபிவிருத்தி செய்யப்படுகிறது.



 (முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

ஹிந்த சிந்தனையின் அடிப்படையில் மன்னார் முசலி மஹிந்தோதயப் பாடசாலை துரிதமாக வளர்ச்சிகண்டு வருகின்றது.

ஆரம்பத்தில் அல்.ஹிறா.ம.வி.எனும் பெயரில் இயங்கிவந்த இப்பாடசாலையின் பெயர் பின்னர் மன்.முசலி.ம.வி.என மாற்றப்பட்டது.1990 வரை இப்பாடசாலை கலை, வர்த்தகப் பிரிவுகளைக்கொண்ட  1 சி,பாடசாலையாகவும்,கொத்தணிப் பாடசாலையாகவும் இயங்கிவந்ததும் ,குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் மக்களின் பலவந்த வெளியேற்றத்தின் பின்பு இப்பாடசாலை மூடப்பட்டது.முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தின் பின்பு இப்பாடசாலை மீளவும் திறக்கப்பட்டு தரம் 11 வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டது.பலரின் முயற்சியின் காரணமாக உயர்தர கலை,வர்த்தக வகுப்புக்கள் வைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

அமைச்சர் றிசாத் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ,அமைச்சரின் இணைப்புச்செயலாளர் ,அலிகான் ஷரீப்,முசலிப்பிரதேசசபைத் தவிசாளர் எஹியான் அப்துல் வஹாப் போன்றோரின் அயராத முயற்சியின் காரணமாக இப்பாடசாலை 1000 பாடசாலைகள் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு இவ்வருடம் இங்கு உயர்தர கணித,விஞ்ஞான பிரிவுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யு.எஸ்.எயிட். நிதியுதவியில் இருமாடிக்கட்டிட நிர்மாணிப்புப் பணிகள் ,மஹிந்த விஞ்ஞான ஆய்வுகூடப்பணிகள்,மாணவர் விடுதி நிர்மாணிப்புப் பணிகள்,சிறிய மஸ்ஜித் நிர்மாணப்பணிகள் என்பன துரிதமாக இடம்பெறுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இப்பணிகள் பூர்த்தியாகும்போது,பாடசாலையின் தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும்.
இப்பாடசாலை மீளத்திறக்கப்பட்ட காலத்தில் எவ்வித வசதி வாய்ப்பும் அற்றுக் காணப்பட்டதுடன்,வனவிலங்குகளின் அச்சுறுத்தல் நிலைமையும்.போதிய போக்குவரத்துச்சிக்கல்களும் காணப்பட்டது.

இதையெல்லாம் சகித்துக்கொண்டு பாடசாலையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கோடு கடமைபுரிந்த  ஓய்வு பெற்ற அதிபரின் பணி காலத்தால் அழியாதது.

பீனிக்ஸ் பறவையாக இக்கல்லூரி உயிர்த்தெழ எஸ்.குலாம்காதர் அவர்களே காரணமாகும்.

இப்பாடசாலையின் வரலாற்றாதாரங்கள் அனைத்தும் யுத்தத்தால் அழிந்து விட்டன.என்னால் இயன்றவரை முயன்று இங்கு சேவை புரிந்த அதிபர்களின் தகவல்களைத் தருகின்றேன் பிரதேச மக்கள் இதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக

 அதிபர்கள் பெயர்                   அவர்களின் சொந்த இடம்

01.திரு. சுவாம்பிள்ளை                  யாழ்ப்பாணம்
02.திரு .  சின்னத்தம்பி  -                யாழ்ப்;பாணம்
03.ஜனாப். சரீப்  -                     எருக்கலம்பிட்டி
04.ஜனாப். ஸலாம் -                 குடியிருப்பு மன்னார்
05.ஜனாப். கபூர் -                   எருக்கலம்பிட்டி
06.ஜனாப். சித்தீக் -                  தாராபுரம்
07.ஜனாப். அமீர் -                   விடத்தல்தீவு
08.ஜனாப். அப்துல் ஹக் -             எருக்கலம்பிட்டி
09.ஜனாப். முஸ்தபா -                எருக்கலம்பிட்டி
10.ஜனாப். அலி -                   தாராபுரம்
11.ஜனாப். இப்ராகிம் (பி.அதிபர்);         எருக்கலம்பிட்டி
12.ஜனாப். வ.அப்துல் சலாம் (பி.அதிபர்);   முசலி
13.ஜனாப். எஸ். குலாம் காதர் -         சிறுக்குளம்

இறுதியாக கிடைத்த தகவலின் படி இப்பாடசாலை தேசிய பாடசாலையாகவும் உள்வாங்கப் பட்டுள்ளது.

 பல தேசிய பாடசாலைகள் மகிந்தோதைய திட்டத்தின் கீழும் உள்ளீர்க்கப்பட்டுள்ளது. 'உயர்தரம் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் பட்டதாரிகளாக இருக்க வேண்டுமெனவும் , தேசிய பாடசாலைக்கு அதிபர் தரம் 01 ச் சேர்ந்தவர்கள் அல்லது கல்வி நிருவாகச் சேவையைச் சேர்ந்த 02,03 ஐச்சேர்ந்தோர் நியமிக்கப்படவேண்டுமெனவும் கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்கள் கூறுகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :