முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்காகவே தாம் அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் செய்வதாகவும் அரசுடன் இணைந்து அரசியல் செய்வது எதிர்க்கட்சியில் இணைந்து அரசியல் செய்வதைவிட சிரமமானது என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கண்டி மடவளையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பேரினவாதிகள் சிலரால் தற்போது முஸ்லிம்கள் மீது பல்வேறு அழுத்தங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அதனை தந்திரோபாயமாகவே அணுகவேண்டியுள்ளது. இதற்காக நான் அரசை விட்டு வெளியேவர முடியாது. அப்படி வெளியேறினால் அது பேரினவாதத்திற்கு உடந்தையாக போய்விடும். நான் கட்சியின் தலைவன் என்ற வகையில் கட்சியைப் பாதுகாப்பதுடன் உணர்வுபூர்வமாக சமூகம் தொடர்பான பிரச்சினைகளை அணுகவேண்டியுள்ளது.
அரசாங்கத்துடனான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறவு ஒட்டியும் ஒட்டாததுமான ஒரு உறவாகும். ஏனெனில் நான் அமைச்சரவையில் அல்லது ஜனாதிபதியுடன் பேச வேண்டிய இடத்தில் பேசியுள்ளேன். ஆனால் கூட்டுப் பொறுப்பை நான் மீறமுடியாது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து முதலமைச்சு பதவியை பெற்றிருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்திருந்தால் அந்த பதவியின் ஆயுள் காலம் குறுகியிருக்கும். அத்துடன் கிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்களைப் பாதுகாப்பது பாரிய சவாலாக மாறி இருக்கும். பேரினவாத செயற்பாடுகள் எதுவும் தற்செயல் நிகழ்வல்ல. அவை அனைத்தும் திட்டமிட்ட செயற்பாடாகும்.
வேண்டாத மனைவியை கைவிடலாம். பின்னர் எந்தப் பிள்ளை எந்தப் பக்கம் தாவும் என்பது தெரியாது. பேரினவாதத்தின் ஊடாக சிங்கள மக்களை ஓரணியில் திரட்டும் இக்கால செயற்பாட்டின் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து முற்றாக விலகி இருக்கமுடியாது என குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment