இந்த நாடு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கே உரியது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
இன்று (29) காலை வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் வேறு எந்த அரசியல் கட்சி மற்றும் வேறு எந்த இளைஞர் சங்கத்தினாலும் செய்ய முடியாத விடயங்களை தமது கட்சியினர் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் சங்கத்தினர் வவுனியாவிற்குச் சென்று இளைஞர்களிடம் சமாதானத்தை ஏற்படுத்த முடிந்துள்ளதாக சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டார்.
ஆறு வருட காலத்திற்குள் இரண்டாவது தடவையாக தமது கட்சி வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் நகரமாக வவுனியா குறிக்கப்படுவதாகவும் நாடு முழுவதிலும் சகல மக்களிடையும் ஒற்றுமையான வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் சோமவன்ச அமரசிங்க இதன்போது தெரிவித்தார்.

0 comments :
Post a Comment