மத்திய மாகாண சபைத் தலைவர் சர்வாதிகாரியாக செயல்படுகிறார்-முரளி

13வது அரசியல் திருத்த அவசர மத்திய மாகாண சபை அமர்வில் சபை தலைவர் சர்வாதிகாரியாக செயல்பட்டதாக மத்தியமாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மத்திய மாகாண 13வது அரசியல் திருத்த அவசர சபை அமர்வில், இந்த திருத்த சட்ட மூலத்தை ஆதரித்து ஆளும் கட்சி 20 உறுப்பினர்கள் கையொப்பம்மிட்டு சபையில் சமர்ப்பித்துள்ளதாக சபைத் தலைவர் தெரியப்படுத்தினார்.

அதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அதனை பிரேரணையாக சபையில் சமர்ப்பித்து விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

அதற்கு சபைத் தலைவர் செவி சாய்க்கவில்லை. மாறாக சபைத் தலைவர் ஆளும் கட்சி உறுப்பினர்களைப் பார்த்து இந்த 13வது அரசியல் திருத்தற்திற்கு ஆதரவான உறுப்பினர்கள் கரங்களை உயர்த்துமாறு கோரினார்.

அதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கரங்களை உயர்த்தி ஆதரவளித்தனர்.

அதன் பிறகு சபைத் தலைவர், மாகாண சபைகள் சட்டம் அதன் செயல் அமர்வை மீறி, 13வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்து சபையிலிருந்து வெளியேறினார்.

இதன்போது எதிர்கட்சி உறுப்பினர்கள் சபைத் தலைவருக்கு பலத்த கண்டனத்தை தெரிவித்தனர்.

காரணம் எதிர்தரப்பினருக்கு இந்த 13வது அரசியல் திருத்த சட்டத்திற்கு எதிராக வாக்கை பிரயோகிக்கின்ற சந்தர்ப்பம் சபைத் தலைவரினால் அனுமதிக்கப்படவில்லை என முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :