அக்கரைப்பற்று - பட்டியடிபிட்டி பிரதேசத்தில் மாடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்கரைப்பற்று - பட்டியடிபிட்டியைச் சேர்ந்த முஹம்மட் காஸிம் ஜமால்தீன், (67 வயது) என்பவரே கடந்த சனிக்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டுவிட்டு வரும்போது உவாமனக்கட்டு எனும் இடத்தில் மண் எடுப்பதற்கு ஆழமாக குழிகள் தோண்டப்பட்டிருந்தது. அதில் நீர் நிரம்பி இருந்ததை அறியாதவர் குழிக்குள் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உறவினர்களால் தேடப்பட்ட குறித்த நபர் அன்றைய தினம் மாலை சடலமாக மீட்கப்பட்டார். விசாரணைகளை மேற்கொண்ட அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா பிரேத பரிசோதனையின் பின் ஜனாஸாவை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

0 comments :
Post a Comment