ஒலுவில் துறைமுகத்துக்காக அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட ஒலுவில் மக்களின் காணிகளுக்கு உடனடியாக நியாயமானநஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி ஜனாதிபதியை கோரியுள்ளது.
முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஒலுவில் துறைமுகம் அமைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு அரசாங்கத்தினால் ஒலுவில் பிரதேசம் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு அங்கிருந்த பல மக்களின் காணிகள் நஷ்ட ஈடு தருவதாக கூறி சுவீகரிக்கப்பட்டன. ஆனாலும் கி;ட்டத்தட்ட ஒரு சகாப்தம் முடிவுற்றும் சுவீகரிக்கப்பட்ட பல காணிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் சிலரின் காணிகள் முறையான நஷட ஈடு தீர்மாணிக்கப்பட்டும் இப்போது மீண்டும் அவற்றுக்கான நஷ்டஈட்டுத்தொகையை தீர்மாணிக்க வேண்டும் எனக்கூறி இழுத்தடிக்கப்படுவதாகவும் மக்கள் தொடர்ந்து முறையிடுகின்றனர்.
வரலாற்றில் ஒலுவில் மக்களின்; வாக்குகளை பெற்றவர்கள் 1994 ம்ஆண்டு முதல் அமைச்சர்களாக இருந்தும் இந்த மக்களின் சொந்தக்காணிகளுக்கு நஷ்டஈடு கிடைக்கவில்லை என்பதன் மூலம் ஒலுவில் மக்கள் எந்த அளவுக்கு சுயநல அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஒலுவில் மக்களின் வாக்குகளை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சரவையில் பல காலமாக இருக்கின்றது. ஒலுவில் பரதேசம் மைந்துள்ள அம்பாரை மாவட்டத்துக்கு முஸ்லிம் காங்கிரசின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆளுந்தரப்பில் இருக்கின்றார்கள்.
அதே போல் தொடர்ச்சியாக ஒலுவில் மக்கள் சிலரின் வாக்குககளை பெற்று வரும் அதாவுள்ளாவும் தொடர்ச்சியாக அமைச்சராகவே இருக்கின்றார். இருந்தும் இந்த ஏழை மக்கள் இன்னமும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறார்கள் என்றால் இதை விட சோரம் போன அரசியல் இந்த உலகிலேயே இருக்க முடியாது. இவை அத்தனைக்கும் மத்தியிலும் ஒலுவில் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்;று முஸ்லிம் காங்கிரஸ், அதாவுள்ளா காங்கிரஸ் கட்சிகளுக்கே வாக்களிக்கும் ஏமாளிகளாகவும் இருப்பதுதான் ஆசியாவின் ஆச்சர்யமாகவும் உள்ளது.
எது எப்படியிருப்பினும் தாம் காலா காலமாக வாழ்ந்த காணிகளை ஒலுவில் துறைமுகத்துக்கு கொடுத்து விட்டு இன்று அனாதரவாக நிற்கும் ஒலுவில் மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும். ஜனாதிபதியின் இரண்டாவது கால கட்டம் முடிவதற்கு முன்பாகவாவது இந்த மக்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்க வேண்டும் என் நாம் கருதுகின்றோம்.
ஆகவே ஒலுவில் மக்களின் துறைமுக காணிகளுக்கான நஷ்டஈட்டை முழுமையாக வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறது.

0 comments :
Post a Comment