ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிஉயர்பீட உறுப்பினர்களின் அவசரக்கூட்டம் இன்று.

திர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் திர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து ஆராய்வதற்கான முக்கியமான கலந்துரையாடலொன்று திங்கள் கிழமை (08) கொழும்பில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக நடந்துள்ள இச் சந்திப்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப்பாவா பாரூக் உட்பட வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிஉயர்பீட உறுப்பினர்கள், நகரசபை, பிரதேச சபைகளில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும், ஏனைய முக்கியஸ்தர்களும் பங்குபற்றினர்.

இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் சில தினங்களில் மேற்கொள்ளப்படுமென கலந்துரையாடலின் இறுதியில் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளையில் மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீம் இன்று மாலை 4 மணிக்கு குருநாகல், நீர்கொழும்பு வீதியில் அமைந்துள்ள ப்ளு ஸ்கை வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபை தேர்தல் சம்பந்தமான கூட்டமொன்றில் உரையாற்றவுள்ளார். அத்துடன் பொல்காவலையில் இன்று இரவு நடைபெறவுள்ள ஒன்றுகூடல் ஒன்றிலும் இதே விடயம் தொடர்பில் அவர் கலந்துரையாடல் பங்குபற்றுவார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :