அதிகாரப் பகிர்வு இல்லாவிட்டால் நாட்டை ஐக்கியப்படுத்த முடியாது-லக்ஷ்மன்

நாட்டில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படா விட்டால் நாட்டை ஐக்கியப்படுத்த முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் அதிகாரத்தை பகிர்ந்து கொண்ட எந்தவொரு நாடும் அழியவில்லை என கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் குறிப்பிட்டார்.

13ஆம் திருத்தச் சட்டம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

13ஆம் திருத்தச் சட்டம் குறித்த அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு வெளிப்படுத்தினால் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்ற ஐக்கிய தேசியக் கட்சி தயார் என அவர் தெரிவித்தார்.

வாழ்க்கைச் செலவு, பொருளாதார வீழ்ச்சி, அதிகரிப்பு போன்றன குறித்து பேசமுடியாத காரணத்தினால் அரசாங்கம் 13ஆம் திருத்தம் குறித்து பேசிக் கொண்டிருப்பதாக அவர் குற்றஞ்சுமத்தினார்.

13ஆம் திருத்தம் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் பதில் அளிக்காமல் பஷில் ராஜபக்ஷவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்திதாக லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

13வது திருத்தம் தொடர்பில் தீர்மானம் எடுத்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்க வேண்டி ஏற்படும் என அரசாங்கம் அச்சம் கொள்ளவதாக அவர் சுட்டிக் காட்டினார்.AD
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :