
மட்டக்களப்பு - பொலநறுவை வீதியின் மன்னம்பிட்டியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
அதிகாலை 3.00 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சுமார் சென்ற சுமார் 23பேர் கொண்ட மினி பஸ்ஸே விபத்தில் சிக்கியுள்ளது.
வேகமாகச்சென்ற வேன் மரமொன்றில் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதுடன் இதன்போது ஸ்தலத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளதுடன் வைத்தியசாலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட திருமதி மேனகா பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேநேரம் பொலநறுவை போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கிராண் பிரதே சமுர்த்தி தலைமையக முகாமையாளர் வாமதேவன் என்பவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை உயிரிழந்தவர்களின் சடலங்களை மட்டக்களப்புக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அதிகமானோர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அவர்களுக்கு மேலதிக சிகிச்சைகளுக்கான நடவடிக்கைகளை வைத்தியசாலை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோர் பொலநறுவை வைத்தியசாலைக்கு சென்று காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவோரை பார்வையிட்டனர்.
0 comments :
Post a Comment