காத்தான்குடியிலிருந்து ஆறு ஹாபீழ்கள் இன்று பிற்பகல் மாலைதீவு பயணமாகின்றனர்.மாலைதீவில் புனித ரமழான் மாதத்தில் புனித தறாவீஹ் தொழுகையை நடாத்துவதற்காகவே இவர்கள் மாலைதீவு பயணமாகியுள்ளனர்.
காத்தான்குடி ஹுதா வீதியில் வசிக்கும் மௌலவி அல் ஹாபிழ் ஏ.எல்.எம்.நிப்றாஸ் (பலாஹி) தலைமையில் இவர்கள் மாலைதீவு பயணமாகியுள்ளனர்.
மாலைதீவு தத்தே மாநகர மேயர் முகம்மட் றிசானின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் மாலைதீவு பயணமாகியுள்ளனர்.
இவர்களில் காத்தான்குடி, பாலமுனை, காங்கேயனோடை மற்றும் றெதிதென்ன ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.
காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக் கல்லூரி மாணவர்களான இவர்கள் மாலைதீவில் ஒருமாத காலம் தங்கியிருந்து தறாவீஹ் தொழுகையை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment