தம்மை நீண்ட காலமாக தடுத்து வைத்திருப்பதாகத் தெரிவித்து இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
ரஞ்ஜினி என்ற பெண்ணே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக குறித்த பெண் மிக நீண்ட காலமாக முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவின் உத்தரவிற்கு அமையவே இவ்வாறு குறித்த பெண் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மெல்பர்னில் வசித்து வரும் ரஞ்ஜினி என்ற கர்ப்பிணிக்கு முன்னதாக புகலிடக் கோரிக்கை அனுமதிக்கப்பட்டது.
எனினும், ஆசியோவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் எச்சரிக்கை காரணமாக ரஞ்சனியும் அவரது 9, 7 வயது மகன்களும் விலாவுட் தடுப்பு முகாமில் 14 மாதங்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டனர்.
ரஞ்ஜினியின் பிள்ளைகளும் தாயுடன் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், ரஞ்ஜினி உயிரிழந்த விடுதலைப் புலி தலைவர் ஒருவரின் மனைவி எனவும், இள வயதில் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஆசியோவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதற்காக விடுக்கப்பட்டது என்பது புரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டத்தை மீறிச் செயற்படவில்லை என ரஞ்ஜினி தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக தடுத்து வைப்பதன் சட்டபூர்வ தன்மை குறித்து நீதிமன்றில் கேள்வி எழுப்பப்படும் என ரஞ்ஜினியின் சட்டத்தரணி டேவிட் மன்னே தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment