(ரீ.கே.றஹ்மத்துல்லா)
அம்பாறை மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள மீனவர் சம்மேளனம் தமது இறக்காமம் நன்னீர் மீனவர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு பாராபட்சம் காட்டிவருவதாக இன்று(11) மாலை இறக்காமம் மட்டுப் படுத்தப்பட்ட நன்னீர் மீனவர் கூட்டுறவுச்சங்க காரியாலத்தில் மீன்பிடி பரிசோதகர் எம்.எல்.எம். இம்றியாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது தெரிவித்தனர்.
இறக்காமம் பிரதேசத்தில் நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருபவர்கள் எதிர் நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நிர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் மீன்பிடித்துறை மாகாணப் பணிப்பாளர் எஸ். சுதாகர், பிரதேச சபையின் உறுபினர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே. சுனில் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு நேரில் சென்றிருந்த போதே மேற்படி பிரச்சினைகள் தொடர்பாக பிரஸ்தாபித்தனர்.
அங்கு மீனவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், இறக்காமம் குளமானது சுமார் 19 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. இங்கு ஆரம்பகாலத்தில்; மீன்பிடித் தொழிலில் எழுபத்தைந்து தோனிகள் மூலமே மீனவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு தமது ஜீவனோபாயத்தை நடாத்தி வந்திருந்தனர். ஆனால் இன்று சம்மேளனம் என்ற அந்த அமைப்பினூடாக மீன்பிடித் தொழிலில் அனுபவமும், தொடர்பும் இல்லாதவர்கள், மற்றும் அரச தொழிலில் உள்ளவர்கள், சிவில் படைப்பிரிவனர் போன்றவர்களுக்கும் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு இன்று சுமார் 300க்கும் அதிகமான மீன்பிடித் தோனிகள் இக்குளத்தில் மீன்பிடியில் ஈடபட்டு வருவதும், சட்ட விரோதமான முறையில் பாவிக்க முடியாத வலைகளைக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடபட்டு வருவதனாலும் மீன் இனங்கள் அழிந்து, தமது தொழில் பாதிக்கபட்டு வருவதுடன் உண்மையாகவே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருபவர்களுக்கு அச்சுறுத்தலும் விடுக்கபட்டு, அனுமதி பத்திரம் வழங்குவதில் மறுக்கப்பட்டும், பாராபட்சம் காட்டப்பட்டும் வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்சினைகளை கேட்டறிந்த மாகாண அமைச்சர் மற்றும் மாகாணப் பணிப்பாளர் இந்நிலையினை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் மாகாணப்பணப்பாளர் மற்றும் மத்திய அரசாங்கத்தின் நெக்டா பணிப்பாளர், மீன்பிடிச் சங்கங்களின் தலைவர்கள், பிரதேசசெயலளர், சிரேஷ்ட பொலிஸ் அதிதியட்சகர், நீர்பாசன பிராந்திய பணிப்பாளர் உள்ளிட்ட குழு அமைக்கப்பட்டு இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையயை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.

0 comments :
Post a Comment